Saturday, August 1, 2015

காக்காவுக்கும் முட்டை வட்லாப்பத்துக்கும் என்ன சம்பந்தம்?






முட்டை வட்லாப்பம்



இஸ்லாமிய இல்லங்களில், திருமண விசேஷங்களில் மிகவும் பிரத்தி பெற்ற இனிப்பு வகைகளில் முதன்மையான இனிப்பு வகை இது, 
இது எங்க அம்மாவின் ஸ்பெஷல் ஸ்வீட் , அவர்களிடம் இருந்து கற்றுகொண்ட முதல் இனிப்பு வகை இதுவே.

முன்பெல்லாம் பள்ளிகாலங்களில்  அம்மா வருடா வருடம்  புது வருட பிறப்புக்கு இதை தான் செய்வார்கள். கொண்டாட மாட்டோம் ஆனால் இனிப்பு கண்டிப்பாக உண்டு.

காக்காவுக்கும் இந்த முட்டை வட்லாப்பத்துக்கும் என்ன சம்பந்தம் என்று பார்க்கிறீர்களா? கிழே படியுங்கள்.




2011 - பாலவாக்கம்
நாத்தனார் பொண்ணு கல்யாணத்தில் முட்டைவட்லாப்பமும் காகமும்...

இடியாப்பம் , முட்டை வட்லாப்பம் , கால்பாயா ( இடியாப்பம் , கோதுமை ரொட்டி) சூப்பர் காம்பினேஷன்..



தேவையான பொருட்கள்

முட்டை - பத்து (அ) 12
சர்க்கரைஇரண்டு டம்ளர் 
(அதிக இனிப்பு சாப்பிடாதவர்கள் தேவைக்கு அரை டம்ளர் குறைத்து கொள்ளலாம்)
தேங்காய்ஒரு முழு பெரிய தேங்காய் 
ஏலக்காய் - முன்று
முந்திரி - 6
நெய் - அரைதேக்கரண்டி
அலங்கரிக்க
பாதாம் , முந்திரி
மாதுளை முத்துக்கள்




செய்முறை
தேங்காயை அதிகம் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கட்டியாக பால் எடுக்கவும்.
(மீதி இருப்பதை மறுபடி பிழிந்து தேங்காய் பால் சாதம், சால்னா வகைகளுக்கு பயன் படுத்தி கொள்ளலாம்.)
முட்டையை நல்ல நுரை பொங்க அடித்து கொள்ளவும்.
சர்க்கரை பொடித்து வைக்கவும்.
 சர்க்கரை, தேங்காய் பால், முட்டை முன்றையும் நன்கு கலக்கவும்.
முந்திரியை பொடியாக அரிந்து நெய்யில் வறுத்து  சேர்க்கவும்.
ஏலக்காயை பிரித்து உள்ளே உள்ள விதையை எடுத்து லேசாக வறுத்து பொடித்து சேர்த்து நன்கு கலக்கி குக்கரில் அடியில்வைக்கும் தட்டை வைத்து அதன் மேல் , ஒரு டிபன் பாக்ஸில் கலவையை ஊற்றி முடிபோட்டு குக்கரை மூடி 5 விசில் விட்டு 10 நிமிடம் சிம்மில் வைத்து அவிக்கவும்.
சுவையான சூப்பரான முட்டை வட்லாப்பம்ரெடி.
இது இடியாப்பம், ஆப்பம், தோசை ஆகியவற்றிற்குபொருந்தும், இஸ்லாமிய இல்ல ஸ்பெஷல் உணவாகும்.சர்க்கரை அதிகம் விரும்பாதவர்கள் சர்க்கரையின் அளவை அரை டம்ளர் குறைத்து  கொள்ளலாம்
கவனிக்க: இடுப்பு எலும்புக்கு பலம் பெறும். .பூப்பெய்திய பெண்களுக்கு இதை செய்து கொடுப்போம்.







மேலே உள்ளது 100 பேருக்கு நாங்க எல்லாரும் சேர்ந்து நாத்தானார் (எங்க மைனி )மகள் திருமணத்தின் போது 2011 லில் இந்த முட்டை வட்லாப்பத்தை ஆளுக்கு ஒரு வேளையாக செய்து கொண்டு இருக்கும் போது ....  

நான் முட்டையை உடைத்து பிளண்டரில் அடிக்க, பெரிய நாத்தனார் மகள்  கல்வத் தேங்காயை உடைத்து துண்டுகள் போட, பெரிமா பொண்ணு  மீரா தேஙகாய் அரைத்து ஊற்ற, சின்ன நாத்தனார் பொண்ணு குட்டி அஃப்ரின் முந்திரி பாதாம் வெட்டி கொடுக்க எல்லாரும் சேர்ந்து செய்தோம், அப்ப வீட்டின் வெளியில் ஷாமியானா போட்டு இருந்தார்கள். 

அப்ப தான் தீடீரென்று ஒரு காக்கா வெளியில் இருந்து ஹால் வழியாக கிழே கிரவுன்ட் ஃப்ளோரில் வந்து படிக்கட்டில் உட்கார்ந்து விட்டது. வெளியே எங்கும் போக இடம் இல்லை, சுற்றி இருந்தவர்கள், மேலே ஹாலில் இருந்தவர்கள் எல்லாம் ஒரே கூச்சல் போட

கிழே கிச்சனில் நாங்க எல்லோரும் முட்டை , தேஙகாய் பால் , எல்லாவற்றையும் காப்பாற்றுவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

.

உடனே சிங்கம் போல என் மகன் ஓடி வந்தான் அப்படியே அந்த காகத்தை கையில் மெதுவாக பிடித்து வெளியில் கொண்டு போய் விட்டான், இதை எங்க யாராலும் மறக்க முடியாது.

அங்கு ஒருத்தங்க  ஒரு இறந்து போன எங்க மாமாவுக்கு முட்டை வட்லாப்பம் ரொம்ப பிடிக்கும் அதான் வந்து இருக்காங்களா என்று சொன்னார்கள்... 
நீங்க யாராவது காக்கா வை பிடிச்சி இருக்கீங்களா.




இந்த குறிப்பு ஓவ்வொரு முறையும் போடனும் என்று தளளி போய் கொண்டே இருந்தது.அறுசுவை டாட்காமில் நான் கொடுத்த முதல் இனிப்பு வகையும் இதுவே..

எங்க வீட்டுகல்யாணங்களில் திருமணம் முடிந்து மறுநாள் மாப்பிள்ளை தஸ்தர் என்று வைப்பார்கள் அதில் கண்டிபபாக இந்த ஸ்வீட் இடம் பெறும் , இப்ப எலலாரும் ஆர்டர் கொடுத்து விடுகிறார்கள்,

 
குக்கரில் அரைமணி நேரம் செய்து முடித்தது நல்ல ஆறவைத்து பிரிட்ஜில் வைத்து துண்டுகள் போட்டால் தான் நல்ல வரும்.

இது கொஞ்சம் பெரிய வேலை தான் ஆனால் உடல் நலத்துக்கு மிகவும் நல்லது.

ருசித்து மகிழுங்கள்.
இது 10 முட்டைக்கு ஒரு தேங்காயும் போடுவார்கள்
சில டைம் , 12 முட்டைக்கு ஒரு தேங்காயும் போடுவார்கள். தேங்காய் நல்ல முத்தலாக பெரியதாக இருந்தால் நல்லது.

முட்டை அதிகமானாலோ, தேங்காய் பால் கட்டியாக இல்லாமல் இருந்தாலோ கலர் கிரே கலர் வராது.

மேலே உள்ளது போல் இருக்கும்.

கிரே கலரில் இருக்கனும் அது தான் பதம்.
தேங்காய் பால் நல்ல கட்டியாக இருக்கனும். முட்டையை நன்கு அடிக்ககனும். இதில் பாதாம் முந்திரியும் அரைத்து ஊற்றலாம்.




ஜூன் மாதம் 2015 குங்குமம் தோழியில் 30 நான் வெஜ் ரமலான் ரெசிபியில் இதுவும் ஒன்று.










https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

14 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் said...

படங்களுடன் ரெஸிபி விளக்கம் அருமை...
குங்குமம் தோழியில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்

சாந்தி மாரியப்பன் said...

வட்லாப்பம் அசத்தல். இந்த முறை ஊருக்குப் போயிருந்தப்ப கிண்ணத்தப்பம் ருசித்தேன். அருமையான ருசி. முடிந்தால் அந்த ரெசிப்பியும் போடுங்க ஜெலிலாக்கா..

திண்டுக்கல் தனபாலன் said...

புகைப்படங்கள் அசத்தல்...

செய்முறைக்கு நன்றி சகோதரி...

ஹுஸைனம்மா said...

அமைதிக்கா, கிண்ணத்தப்பம் நாரோயில்-கேரளா ஐட்டம்... ஜலீலாக்கா நெல்லை காரங்க.. அவங்க ஊரில் கிடையாது அது. :-)

Jaleela Kamal said...

வருகைக்கும் உங்கள் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சே குமார்/

Jaleela Kamal said...

சாந்தி உங்கள் வருகைக்கு மிக்க நன்றி, கிண்ணத்தப்பம் விரைவில் போடுகிறேன்.

Jaleela Kamal said...

தனபாலன் சார் தொடர் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி .

Jaleela Kamal said...

ஹுஸன்னாம்மா சாந்திக்கு பதில் போட்டமைக்கு நன்றி.

கிண்ணத்தம் 4 மாதம் முன்பே ரெடியாகி விட்டது, நெல்லை காரவுகள் கேரளா ரெசிபி செய்யமாட்டோமா என்ன,.

இவ்ளோ தூரம் வந்தீர்கள் நம்ம நெல்லை ரெசிபிய பற்றி ஒன்றும் சொல்லாமல் போய் விட்டீர்களே?

Jaleela Kamal said...

ஹுஸன்னாம்மா சாந்திக்கு பதில் போட்டமைக்கு நன்றி.

கிண்ணத்தம் 4 மாதம் முன்பே ரெடியாகி விட்டது, நெல்லை காரவுகள் கேரளா ரெசிபி செய்யமாட்டோமா என்ன,.

இவ்ளோ தூரம் வந்தீர்கள் நம்ம நெல்லை ரெசிபிய பற்றி ஒன்றும் சொல்லாமல் போய் விட்டீர்களே? ஹா ஹா

ஹுஸைனம்மா said...

அக்கா, நானும் தின்னவேலிக்காரிதான். நானே கிண்ணத்தப்பம் செய்யும்போது, “சமையல் ராணி” நீங்க செய்யமாட்டீங்களா என்ன?

கிண்ணத்தப்பத்தை போன வாட்டி, கலர் கலர் லேயரா செஞ்சேன். கடல் பாசி செய்வோமே அது மாதிரி. பதிவு போட ஆசைதான். ஆனா, சமைக்கும்போது நடுவுல ஃபோட்டோ பிடிக்கிறது பெரிய நசப்பிடிச்ச வேலை. அதுக்காகத்தான் சமையல் பதிவுகள் எழுதுறதில்லை. எல்லாரும் பிழைச்சீங்க... :-)))

//நம்ம நெல்லை ரெசிபிய பற்றி ஒன்றும் சொல்லாமல் போய் விட்டீர்களே?//

அக்கா, நீங்க எது செஞ்சாலும் ஒரே வார்த்தை பிரமாதம்னு மட்டும்தான் சொல்லமுடியும். அத தனியா சொல்லணுமா என்ன?

ஒரு தேங்காய்னு சொன்னீங்க, தேங்காய்ப் பால் அளவு சொல்லலியே? எனக்கு எப்பவும அதுதான் தகராறு ஆகும். பால் எடுக்கும்போது தண்ணீ அதிகமா ஊத்திருவேன். ஊர்ல ஒருத்தங்ககிட்ட கேட்டப்போ, முட்டையும், தேங்காய்ப் பாலும் ஒரே அளவா இருக்கணும்னு சொன்னாங்க. அத வச்சு ஒப்பேத்திக்கிட்டிருக்கேன்.

Jaleela Kamal said...

தேங்காய் பால் கட்டியாக எடுத்தால் முக்கால் டம்ளர் வரனும், தண்ணீர் ஊற்றி அரைக்க கூடாது.

அப்படியே மிக்சியில் ஒரு சுற்று சுற்றீ விட்டு கொஞ்சம் பவுடர் பால் காய்ச்சி தெளித்தும் அரைக்கலாம், எப்படி இருந்தாலும் தண்ணிரை தெளித்து தெளித்து தான் அரைக்கனும்.

முட்டையையும் கட்டி படாமல் நுரை பொங்க அடிக்கனும்

Jaleela Kamal said...

ஏற்கனவே இரண்டு முன்று பேர் கிண்ணத்தப்பம் ரெசிபி கெஸ்ட் போஸ்ட்க்கும் அனுப்பி இருகிறார்கள்,

லேயர் செய்து போட்டோ எடுப்பது நீண்ட வேலை.
இதே மலேஷியா சிங்கப்பூர் காரர்கள் கூவே என்ற பெயரில் வித விதமாக செய்வாரக்ளாம் இந்த இணிப்பை செய்கிறாரக்ள்.

நாங்க திருநெல்வேலி கார்ர்களாக இருந்தாலும் முழுக்க முழுக்க சென்னை வாசி , ஆனால் இது இளஸ்லாமிய இல்ல பாரம்பரிய ரெசிபி .. கீழக்கரை காயல் பட்டினம், நெல்லை, கடையநல்லஊர், இளையாங்குடி ,இலங்கை, நாஹூர், சென்னை, மற்றும் பல ஊர்களில் வாழும் இஸ்லாமியர்களில் பாரம்பரிய இனிப்பு வட்லாப்பம்

ஊருக்கு ஊர் செய்முறை அளவுகள் , சர்கக்ரைக்கு பதில் வெல்லம், கருப்பட்டி என பொருட்கள் மாறுபடலாம்.


திருநெல்வேலி காரவுக நீங்க செய்த கேரளா கிண்ணத்தப்பதை அனுப்புங்கள் , உங்கள் பெயரை சொல்லு சாந்திக்காக இங்கே யே கொடுத்து விடுகிறேன்.

Vikis Kitchen said...

ரொம்ப சுவாரசியமான நிகழ்வுகளுடன், இந்த இனிப்பை பகிர்ந்தமைக்கு நன்றி. இதில் கொஞ்சம் இலகுவாக சில பொருட்கள் மட்டும் சேர்த்து எங்கள் வீட்டில் புட்டிங் செய்வார்கள். காலை உணவுடன் பரிமாறுவார்கள். பிரிட்டிஷ் காலத்து உணவு என்றும் சொல்வார்கள். ஆனால் உங்கள் புட்டிங் இன்னும் அருமை. கண்டிப்பா செய்து பார்க்க வேண்டிய ரெசிபி.

Vikis Kitchen said...

Vatilappam look very delicious. Love it !
Here is my family's version of a simple egg pudding ...akka it's not grand like yours , but wanted to show you mine :)
http://elitefoods.blogspot.com/2010/11/old-fashioned-egg-pudding.html

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா