Sunday, October 12, 2014

தில் கீரை இந்தியன் டோனட் - Dill Leaves Vadai


தில் கீரை உளுந்து வடை

நோன்பு நேரத்தில் யாரும் காய்கறி வகைகளோ அல்லது கீரை வகைகளோ சேர்ர்த்து கொள்வதில்லை, கஞ்சி செய்யும் போது காய்கறிகளையும், உளுந்து வடை , பருப்பு வடை செய்யும் போது கீரை வகைகளையும் சேர்த்து கொண்டு ஆரோக்கியமான சிற்றுண்டியை தயாரிக்கலாம்.

Step by Step Dill Leaves Doughnut Click here

தேவையான பொருட்கள்.


 உளுந்து பருப்பு - 200 கிராம்
பச்ச மிளகாய் - 3
உப்பு - முக்கால் தேக்கரண்டி ( தேவைக்கு)
தில் கீரை -  ஒரு கட்டு பொடியாக நறுக்கியது
வெங்காயம் - இரண்டு பொடியாக நறுக்கியது
அலங்கரிக்க தில் கீரை சிறிது
எண்ணை - பொரிகக் தேவையான அளவு


செய்முறை 
1. தில் கீரையை மண்ணில்லாமல் கழுவி அதை பொடியாக நறுக்கி தண்ணீரை வடிக்கவும்.
2.உளுந்து பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து நன்கு வடிக்கட்டி , அத்துடன் பச்சமிளகாய் உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும்.
3.அரைத்த உளுத்தமாவில் வடிகட்டிய தில்  கீரை, அரிந்த வெங்காயம் சேர்த்து நன்கு பிசறி வைக்கவும்.
4.ஒரு வாயகன்ற இரும்பு வானலியில் எண்ணையை காயவைத்து வடை மாவை கமலா பழ சைஸ் உருண்டைகளாக பிடிதது வட்ட வடிவமாக தட்டி கட்டை விரலால் நடுவில் ஓட்டை போட்டு தீயின் தனலை மிதமாக வைத்து கருகாமல் பொரித்து எடுக்கவும்.
சுவையான அயர்ன் சத்து மிகுந்த உளுந்து வடை தயார்.


2 கருத்துகள்:

Angel said...

ஆஆஹ் !! இந்த கீரையை கடைல பார்த்திருக்கேன் !! சமைக்க தெரியாததால் வாங்கினதில்லை ..தேங்க்ஸ் ரெசிப்பிக்கு !

மனோ சாமிநாதன் said...

கீரை வடைக்கு இந்தியன் டோனட் என்று அழகாய் பெயர் கொடுத்து நல்லதொரு செய்முறை விளக்கமும் கொடுத்திருக்கிறீர்கள் ஜலீலா! வாழ்த்துக்கள்!!

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா