Saturday, October 4, 2014

ஆட்டு ஈரல் பாலக் கீரை பிரியாணி (புலாவ்)

அனைவருக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.


Mitta Khana மிட்டாகானா  லின்கை சொடுகி பார்க்கவும்.




ஹஜ் பெருநாளுக்கு எல்லாரும்  ஆடு அறுத்து  அதை உறவினர்களுக்கும் , தெரிந்தவர்களுக்கும் பண்டமாற்று போல் ஒருவருக்கு ஒருவர் பங்கிட்டு  கொடுப்பார்கள், அப்படி எல்லாவீடுகளில் இருந்து வரும் கறிகளை பதப்படுத்துவார்கள். 

அதை உப்பு கண்டம் போடுவார்கள்.உப்பு கன்டம் கறி தயாரித்து வெளிநாடுகளில் உள்ளவர்கள் பேக்கிங் செய்து அனுப்புவார்கள்.இதை தண்ணீர் படாமல் வைத்து தேவைக்கு எடுத்து தட்டி அப்பளம் பொரிப்பது போல் பொரித்து ரசம் சாதம், பருப்பு சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.







மட்டன் தக்கடியும் போட்டு குடும்பத்தினருடன் சேர்ந்து விருந்து வைத்து சாப்பிடலாம்.






அதில் இருக்கும் ஈரல், மண்பத்தை போன்றவைகளை இப்படி புலாவ் பிரியாணி போல் செய்யலாம்.

ஆட்டு ஈரல் பாலக் கீரை பிரியாணி (புலாவ்)
தேவையான பொருட்கள்
தேங்காய் சாதம் தாளிக்க
1.    தரமான பாசுமதி அரிசி – அரை படி (4டம்ளர்) 800 கிராம்
2.    தேங்காய் – அரை மூடி
3.    எண்ணை – 100 மில்லி
4.    பட்டை  - 1ஒரு இன்ச் சைஸ்
5.    கிராம்பு – 2
6.    ஏலக்காய் – 2
7.    வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது
8.    இஞ்சி பூண்டு விழுது ஒரு மேசைகரண்டி
9.    கொத்துமல்லி புதினாதழை
10.  பாலக் கீரை – இரண்டு கட்டு
11.  கடலைபருப்பு – 100 கிராம்
ஈரல் வேக வைக்க
1.    ஈரல் – அரை கிலோ
2.    எண்ணை – 50 மில்லி
3.    வெங்காயம் – கால் கிலோ
4.    தக்காளி – கால் கிலோ
5.    இஞ்சி பூண்டு விழுது – ஒரு மேசைகரண்டி
6.    பச்ச மிளகாய் - 2
7.    மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
8.    தனியா தூள் – ஒரு தேக்கரண்டி
9.    உப்பு தூள் – தேவைக்கு
10.  கரம் மசாலா தூள் – கால் தேக்க்ரண்டி
11.  கொத்துமல்லிபுதினா தழை – சிறிது



செய்முறை
1.    முதலில் ஈரலை சுத்த படுத்தி தண்ணீரை வடிக்கவும்
2.    கடலை பருப்பை 5 நிமிடம் ஊறவைத்து வேகவைத்து லேசாக மசித்து வைக்கவும்.அரிசியை 20 நிமிடம் ஊறவைக்கவும்.
3.    கீரையை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி பொடியாக நறுக்கிவைக்கவும்.
4.    தேங்காயை துருவி பாலெடுத்து வைக்கவும்.


5.    குக்கரில் எண்ணையை காயவைத்து பட்டை ஏலம் கிராம்பு போட்டு வெடிய விட்டு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சைவாடைபோகும் வரை வதக்கி கொத்துமல்லி புதினா சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி தக்காளிபொடியாக அரிந்து சேர்த்து பச்சமிளகாய் ஒடித்து போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.சேர்க்க வேண்டிய தூள்வகைகள் அனைத்தையும் சேர்த்து ஈரலையும் சேர்த்து குக்கரில் முன்று விசில் விட்டு இரக்கவும்.

6.    பிரியாணி செய்யும் பாத்திரத்தில் எண்ணையை ஊற்றி பட்டை கிராம்பு ஏலம் சேர்த்து வெடிய விட்டு வெங்காயம்,இஞ்சி பூண்டு புதினா கொத்துமல்லி தழை சேர்த்து தாளிக்கவும்.

7.    அடுத்து வெந்த ஈரலை சேர்த்து ஒரு டம்ளருக்கு ஒன்னறை டம்ளர் வீதம்  அளந்து ஊற்றவும். 4 டம்ளர் அரிசிக்கு 6 டம்ளர் தேங்காய் பால் ஊற்றவேண்டும்.


8.    லேசாக கொதிக்கும் போது அரிசியை களைந்து ஊற்றி உப்பு சரி பார்த்து சேர்க்கவும். அரை பதம் அரிசி வெந்த்தும் வேகவைத்த கடலை பருப்புஅரிந்து வைத்துள்ள கீரை சேர்த்து முடிபோட்டு தீயின் தனலை சிம்மில் வைத்து20 நிமிடம் தம்மில் விடவும்.
9.    சுவையான ஆரோக்கியமான சத்தான ஈரல் கீரை பிரியாணி ரெடி.

இது ஹிமோ குளோபின் அளவு கம்மியாக உள்ளவர்கள் இந்த ஈரல் கீரை பிரியாணியை அடிக்கடி  சாப்பிட்டு வந்தால் கூடிய விரைவில் இரண்டு மாதத்திற்குள் ஹிமோ குளோபின்   அளவு அதிகரிக்கும்

பரிமாறும் அளவு : 6 நபர்களுக்கு
ஆயத்த நேரம் : 1 மணி நேரம்

சென்னை ப்ளாசா : https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
சமையல் அட்டகாசங்கள்: https://www.facebook.com/Samaiyalattakaasam




அனைவருக்கும்  இனிய தியாக திருநாள் வாழ்த்துக்கள்




https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

2 கருத்துகள்:

Angel said...

வித்யாசமா இருக்கு ஜலீலா கணவருக்கும்கன்டிப்பா செய்யணும் நான் .
செய்துவிட்டு சொல்றேன் ..இப்படி இரண்டு காய்கறிகள் சேர்த்து சமைக்கும்போது சாப்பிட ஈசியா இருக்குமில்லையா !
தனியே ஈரல் மட்டும்னா பொண்ணு சாப்பிட மாட்டா .ரெசிப்பிக்கு நன்றி
எனக்கு அந்த மிட்டா கானா அப்படியே பிளேட்டை தள்ளுங்க :)
எங்கப்பா பிரண்ட்சுங்க தான் எங்க கல்யாணத்துக்கும் விருந்து செய்தாங்க இதே மாதிரி மிட்டா கானா எனக்காவே செய்து தந்தார் அப்பாவின் நண்பர்

Jaleela Kamal said...

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி அஞ்சு

கண்டிப்பாக செய்து பார்த்து வந்து சொல்லுங்கள் .
மிட்டாகானா கல்யாண வீட்டு விஷேஷங்களில் வைபபர்கள் ரொம்ப சூப்பராக இருக்கும்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா